நஸ்ரியாவின் அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

237

Nazriya

நடித்த சில படங்களிலேயே தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா. இவர் நடித்த ராஜா ராணி, நேரம் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

இந்நிலையில் தனுஷுடன் இவர் நடித்த நையாண்டி படத்தில் ஏற்ப்பட்ட சர்ச்சையால், சற்று இவரது பெயர் அடிவாங்கினாலும் தொடர்ந்து எல்லோருக்கும் பிடித்த நடிகையாக தான் வலம் வருகிறார்.ஆனால் இவர் தமிழ் திரையுலகிற்கு முதன் முதலாக அறிமுகமான படம் திருமணம் என்னும் நிக்காஹ், இப்படம் வெளிவருவதற்குள், மற்ற படங்கள் வெளிவந்தது.

சமீபத்தில் இப்படம் வெளிவந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று நஸ்ரியா கூறியதாக நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.