இலங்கையின் உள்ளூர் அணியை கைவிட்டு இந்திய அணியைத் தேர்வு செய்த லசித் மலிங்க!!

297


Malinga

இலங்கையின் உள்ளூர் அணியை கைவிட்டு இந்திய அணியை இலங்கை அணியின் தலைவர் லசித் மலிங்க தெரிவு செய்துள்ளார். இலங்கை டுவன்ரி-20 கிரிக்கெட் அணியின் தலைவராக லசித் மலிங்க கடமையாற்றி வருகின்றார்.



அண்மையில் இலங்கை அணி உலகக் கிண்ணத்தை வெற்றியீட்டிய போதும், லசித் மலிங்க இலங்கையை வழிநடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஓர் நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவன்ரி-20 போட்டித் தொடரில் உள்ளுர் அணிக்காக விளையாடப் போவதில்லை என மலிங்க அறிவித்துள்ளார்.



மாறாக ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தமது சேவையை வழங்க விரும்புவதாக நேற்று லசித் மாலிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.



லசித் மலிங்க இலங்கையில் சவுத்தேர்ன் எக்ஸ்பிரஸ் கழகத்திற்காக விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடைபெற்ற சுப்பர் போர்ஸ் போட்டித் தொடரில் சவுத்தேர்ன் எக்ஸ்பிரஸ் அணி வெற்றியீட்டியிருந்தது.


மும்பை இந்தியன்ஸ் அணி, லசித் மலிங்கவிற்கு கூடுதலான கொடுப்பனவை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் அணிக்காக விளையாடுவதா அல்லது வெளிநாட்டு அணிக்காக விளையாடுவதா என்பதனை லசித் மலிங்கவே தீர்மானிக்க வேண்டுமென இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. இதன்படி, லசித் மாலிங்க இந்தியாவின் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதென தீர்மானித்துள்ளார்.