பொதுநலவாய போட்டியில் 13 வயது சிறுமி உலக சாதனை!!

238


13 years girl

பொதுநலவாய போட்டிகளின் பாரா பிரிவிலான நீச்சலில் மிக இளம் வயதில் பதக்கம் வென்றவர் என்ற புதிய சாதனையை, ஸ்காட்லாந்தின் எர்ரெய்ட் டேவிஸ் நிகழ்த்தியுள்ளார். இவரின் வயது 13 ஆகும். பாடசாலையில் படித்து வரும் இவர், 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் வெண்கலம் வென்றார்.



பொதுநலவாய விளையாட்டில் பங்கேற்ற நீச்சல் குளத்தை விட 3 மடங்கு சிறிய நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்று எர்ரெய்ட் சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்பாராத இந்த வெற்றியினால் தான் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ரசிகர்களின் உற்சாகக் குரல் என்னை மேலும் வேகமாக நீச்சல் அடிக்கத் தூண்டியது’ என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது எதிர்கால லட்சியம் குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்,



நீச்சல் அடிப்பதை நேசிக்கிறேன். எதிர்காலத்தில் இதுதான் நடக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. இருப்பினும், 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முயற்சிப்பேன் என்று கூறினார்.



16.6 மீட்டர் நீளம் கொண்டுள்ள நீச்சல் குளத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு, இவர் இந்த சாதனயைப் புரிந்துள்ளார்.


இந்தக் குளத்தில் வாரத்துக்கு 11 மணி நேரம் (சுமார் 27.5 கிலோ மீட்டர் தூரம்) எர்ரெய்ட் பயிற்சி எடுத்ததாக அவரது பயிற்சியாளர் லோரைன் கிஃபோர்டு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.