வவுனேஸ்வரத்து அகிலாண்டேஸ்வரி அம்பாளின் தீர்த்த உற்சவமும் ஆடிபூர திருவிழாவும்!!(படங்கள்)

316

பாடல் பெற்ற சிவதலங்கள் நிறைந்த இலங்காபுரியின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு பத்தாம் நாள் தீர்த்த திருவிழா நிகழ்வு இன்று காலை ஒன்பதரை மணியளவில் அமிர்தவர்ஷினி தீர்த்த தடாகத்தில் இடம் பெற்றது.

காலை எட்டு மணிக்கு மூலஸ்தான பூசை கொடிதம்ப பூசை சுண்ணம் இடித்தல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்று ரிஷப வாகனத்தில் அமிர்த வர்ஷினி தீர்த்த தடாகத்தில் எழுந்தருளி செய்தாள். காலை பத்து மணியளவில் தீர்த்த உற்சவம் நிறைவு பெற்று யாகம் கலைத்த பின்னர் பதினோரு மணியளில் அம்பாளுக்கு ஆடிபூர ருது சாந்தி உற்சவம் இடம்பெற்றது.

ஆடிப்பூர விசேட அபிசேகங்களை தொடர்ந்து இன்றைய பகல் திருவிழா நிறைவு பெற்றது. உற்சவ கால நிகழ்வுகள் யாவுக்கும் வவுனியா நெற் இணையம் ஊடக அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

திருவிழா தொடர்பான விபரங்களுக்கு தொடர்ந்தும் வவுனியா நெற்ருடன் இணைந்திருங்கள்.

-கஜேந்திரன்-

20 21 22 23 24 25 26 27 28