மொயீன் அலியின் உணர்வை முடக்கிய சர்வதேச கிரிக்கெட் சபை!!

264

Moin-Ali

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி ‘காஸாவைக் காப்பாற்றுங்கள்’ மற்றும் ´பாலஸ்தீனத்திற்கு விடுதலை அளியுங்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய ரிஸ்ட் பேண்ட் அணிந்து டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.

உடனே ஐசிசி சமயம் மற்றும் அரசியல் சார்ந்த செய்திகள் அடங்கிய ரிஸ்ட் பேண்ட்களை அணியக்கூடாது என்று தடை விதித்தது.  ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் சபை மொயீன் அலியின் இந்தச் செயல்பாடு மனிதார்த்த மதிப்பீடுகள் சார்ந்ததே தவிர அரசியல் அல்ல என்று ஆதரவு அளித்துள்ளது.

அதாவது மொயீன் அலி தனது கருத்துக்களை சுதந்திரமாகக் கூறலாம், ஆனால் கிரிக்கெட் மைதானத்தில் சமயம், அரசியல் சார்ந்த கருத்துக்களையோ அடையாளங்களையோ வெளிப்படையாக தெரியப்படுத்தக் கூடாது என்று ஐசிசி ஆட்ட நடுவர் மொயீன் அலியை எச்சரிக்கை செய்துள்ளார்.

ஐசிசி வீரர்கள் நடத்தை விதிமுறைகள் இதனை அனுமதிப்பதில்லை என்று ஐசிசி கூறியுள்ளது.

மொயீன் அலி பாகிஸ்தானில் பிறந்தவர். இவர் இங்கிலாந்துக்காக இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 6 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.