வவுனியா இலங்கை வங்கி கிளையில் இலங்கை வங்கியின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நிகழ்வுகள்!!

341


இலங்கை வங்கியின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு வவுனியா இலங்கை வங்கி கிளையில் இன்று (01.08) வெள்ளி காலை வங்கியின் முகாமையாளர் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இவ் வைபவத்தில் சர்வமத தலைவர்களும், பிரதம விருந்தினராக கல்வியற் கல்லூரி பீடாதிபதியும், சிறப்பு விருந்தினராக வர்த்தக சங்க தலைவர், செயளாலர், மற்றும் வாடிக்கையாளர்களும் கலந்துகொண்டனர். 75 ஆம் ஆண்டை முன்னிட்டு கேக் வெட்டி மேற்படிநிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



2 4 5 6 7 8 9