வவுனியா குளத்தில் பெருமளவிலான மீன்கள் இறக்கக் காரணம் பாரிய இயந்திரங்களைக் கொண்டு வயல்களுக்கு நீர் இறைக்கப்பட்டமை : நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!!

352

வவுனியா குளத்தில் பெருமளவிலான மீன்களின் இறப்புக்கு காரணம் அளவுக்கதிகமான நீர் பாரிய இயந்திரங்களைக் கொண்டு வயல்களுக்கு இறைக்கபட்டமையால் அவ்வியந்திரங்களுக்குள் சிக்குண்டு மீன்கள் இறந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குளத்தில் நீர் மட்டம் திடீரென குறைந்தமையால் மேற்படிசம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவத்தால் மீன்பிடியை நம்பி பிழைப்பு நடாத்தும் நாற்பதுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரியவருகின்றது. நன்னீர் மீன்வளத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி குறித்த தொழிலாளர்கள் மேலதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

வவுனியா பூந்தோட்டம் வீதியால் பயணம் செய்யும் மக்கள் மற்றும் குடியிருப்பு பிரதேசவாசிகள் இறந்த மீன்களின் துர்நாற்றம் காரணமாக பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். எனவே விரைவான நடவடிக்கை எடுக்கும் வண்ணம் பொதுமக்கள் தரப்பாலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இறந்த மீன்களை அப்புறபடுத்தாதுவிடின் மீன்வளம் முழுமையாக அழிவடையும் அபாயம் நிலவுகிறது.

-பண்டிதர்-

தொடர்புபட்ட செய்தி..

வவுனியா குளத்தில் பெருமளவிலான மீன்கள் இறந்த நிலையில் அப்பகுதியெங்கும் துர்நாற்றம் : பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!!

1 2 3 4 5 7 8 10 11