அமெரிக்க செய்தியாளரின் தலையை துண்டித்த தீவிரவாதிகளின் வெறிச்செயல் : அதிர்ச்சியில் ஒபாமா!!

299

ஈராக் மற்றும் சிரிய எல்லைப்பகுதியில் இஸ்லாமிய ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா வான் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, செய்தியாளர் ஒருவரின் தலையை துண்டித்து தீவிரவாதிகள், அமெரிக்காவை அச்சுறுத்தியுள்ளனர்.

ஜேம்ஸ் ஃபோலே (James pole) எனும் அமெரிக்க செய்தியாளர் சிரியாவில் செய்தி சேகரித்து வந்தார். கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 22ம் திகதி முதல் இவரை காணவில்லை. இவருடன் ஸ்டீவன் ஜோயல் கோட்லாப் (Steven Joyal Gotlap) என்ற நிருபரும் மாயமானார்.

இந்த நிலையில் குறித்த செய்தியாளரை கொலை செய்த தீவிரவாதிகள், அதனை இணையத்தளங்களில் வெளியிட்டுள்ளன.
நான்கு நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய அந்த காணொளியில் நிருபர் ஜேம்ஸ் ஃபோலேயின் தலை துண்டித்து கொலை செய்யப்படும் காட்சி இடம் பெற்றிருந்தது.

தீவிரவாதிகளின் இச்செயலுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த உலகமே பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலே கொல்லப்பட்ட விதத்தை பார்த்து திகைத்து நிற்பதாக ஒபாமா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

கொடூரமான இச்செயலை செய்த இந்த தீவிரவாத புற்றுநோயை ஒழிக்க பொதுவான முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் அப்போது தான் இப்படிப்பட்ட தாக்குதல்கள் பரவாமல் தடுக்க முடியும் எனவும் ஒபாமா மேலும் கூறியுள்ளார்.

T1 T2