திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க நேரடியாக களத்தில் இறங்கும் பார்த்திபன்!!

298

parthi

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. இப்படத்தை பார்த்திபன் இயக்கியிருந்தார். இதில் புதுமுகங்கள் நடித்திருந்தனர். மேலும் ஆர்யா, விஷால், பிரகாஷ்ராஜ், விஜய்சேதுபதி, அமலாபால், டாப்சி உள்ளிட்ட பலர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர்.

படத்தைப் பார்த்த பலரும் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடந்தது. இதில் பார்த்திபன் பேசும்போது,

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வெற்றியடைந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. படம் பார்த்த பலர் என்னை பாராட்டுகின்றனர். ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும் மறுபக்கம் துக்கமும் வந்துள்ளது. இப்படம் தற்போது திருட்டு வி.சி.டி.யில் வெளியாகியுள்ளது.

திருட்டி வி.சி.டி. என்பது தற்போது பரவி வரும் எபோலா நோய் போல் ஆகிவிட்டது. இந்நோய்க்கு மருந்து இல்லாதது போல் திருட்டி வி.சி.டி.யும் ஒழிக்க முடியாத ஒன்றாகி வருகிறது. ஆனால் நான் அதை விடமாட்டேன்.

நாளை முதல் நானே நேரடியாக களத்தில் இறங்குகிறேன். திருட்டி வி.சி.டி. தயாரிப்பவர்களை பொலிஸ் துணையோடு பிடிக்க போகிறேன். இப்படம் எப்படி திருட்டு வி.சி.டி.யில் வந்தது என்று கண்டறிய ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு தனி குழுவை உருவாக்கியிருக்கிறேன்.

இதில் ஒரு தியேட்டர் சம்பந்தப்பட்டுள்ளது. அந்த தியேட்டரின் அனுமதியோடு திருட்டு வி.சி.டி.கள் உருவாகின்றன. அதைக் கண்டறிந்து அந்த தியேட்டரை தடை செய்ய வலியுறுத்துவேன் என்று பரபரப்பாக பேசினார்.