காதல் திருமணம் செய்யும் சென்ராயன்!!

308


se

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் சென்ராயன். அப்படத்தை தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம் உட்பட பல படங்களில் நடித்திருந்தார்.



ஜீவா நடிப்பில் உருவான ரௌத்திரம் படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்தார். இதில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இவர் பட்டதாரி பெண்ணான கயல்விழி என்பவரை காதலித்து வந்தார். இரு வீட்டாரையும் சமாதானப்படுத்திய சென்ராயன் இம்மாதம் 31ம் தேதி கயல்விழியை திருமணம் செய்துகொள்கிறார்.



வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த திருமணத்தில் கலையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொள்கிறார்கள்.