சங்ககாரவின் சாதனையை முறியடித்த டோனி!!

275


Dhoni

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டெம்பிங் செய்து இந்திய அணித்தலைவர் டோனி உலக சாதனை படைத்துள்ளார்.



இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 2 ஸ்டெம்பிங் செய்து டோனி முதலிடம் பிடித்தார். இவர் இதுவரை 131 முறை ஸ்டெம்பிங் செய்துள்ளார்.

இவரை தொடர்ந்து 129 முறை ஸ்டெம்பிங் செய்து இலங்கை வீரர் சங்ககாரா 2வது இடத்தில் உள்ளார். முன்னாள் இலங்கை வீரர் களுவிதாரன(101), முன்னாள் பாகிஸ்தான் வீரர் மொயின் கான் (93), முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் அடம் கில்கிறிஸ்ட்( 92) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.