அணு ஆயுதங்களுடன் தயார் நிலையில் படையினர் : மிரட்டும் ரஷ்யா!!

503

ரஷ்யாவுடன், உலக நாடுகள் மோதுவதை தவிர்ப்பதே நல்லதென அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

க்ரெம்லினில் இளைஞர் முகாமை ஒன்றை ஆரம்பித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ஆயுதப் படையினர் அணுவாயுதங்களால் பலப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த விதமான சவால்களையும் சந்திப்பதற்கு தயாராக வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரேனிலிருந்து க்ரைமியாவை பிரித்து ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டமையையும் புடின் நியாயப்படுத்தியுள்ளார்.

இதன்மூலம் வன்முறைகள் மிகுந்த உக்ரேன் அரசாங்கத்திடம் இருந்து பாரிய அளவலான ரஷ்ய மொழி பேசும் மக்களை தாம் பாதுகாத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை உக்ரேன் அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்யா படையினரை அனுப்பி வருவதாக உக்ரேன் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

R2 R1 R