வவுனியா புதுக்குளம் அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் அறப்பணி செய்யும் நோக்குடன் “சுப்ரமணியம் அறக்கொடை நிதியம்” அங்குரார்ப்பணம்!!

277

வன்னி மாநகரில் விநாயகர் ஆலயங்களுள் சிறப்பாக விழங்கும் வவுனியா புதுக்குளம் அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் விநாயகப் பெருமானுக்குரிய சிறப்பான தினங்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி கடந்த 29.08.2014 வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடை பெற்றது.

அன்றயதினம் காலை 10.30 மணியளவில் கிரியைகளும் அதனைத் தொடர்ந்து 108 சங்குகளால் மூலமூர்த்திக்கும் ஏனய பரிவாரத் தெய்வங்களுக்கும் விஷேட அபிஷேகம் இடம் பெற்றது. அத்துடன் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாலை 6.00 மணியளவல் ஆலயத்தில் மிக நீண்டகாலம் பூசை செய்து ஆலயத்தை ஊர் மக்களேடு சேர்ந்து வளர்த்து நிர்வகித்து அமரத்துவம் எய்திய அமரர் வி.சுப்ரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக புலம்பெயர் நாட்டில் வாழும் உறவுகளான திருமதி.பாலேஸ்வரன் சுதர்சினி அவர்களின் நல்லெண்ணத்தில் ஏனய புலம்பெயர் உறவுகளின் உதவியுடனும் ஆலயப் பணியை மட்டுமன்றி அறப்பணியையும் செய்யவேண்டும் என்ற நோக்கில் ”சுப்ரமணியம் அறக்கொடை நிதியம்” என்ற அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு வவுனியா பூம்புகாரி்ல் வசிக்கும் வறிய குடும்பத்தவரும் தனது இரு கால்களையும் இழந்த இரு பிள்ளைகளின் தந்தையான யே.சிமோன் அவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு சுப்ரமணியம் அவர்களுடைய மகள் திருமதி.தவராசமணி அவர்களால் வளங்கப்பட்டது.

அத்துடன் நிதியத்தின் செயற்பாடுகள் குறிப்பாக வறிய மாணவர்களின் கல்வி செயற்பாடுகளிலும் விஷேட தேவைக்கூட்பட்டோரின் நலன்கருதியும், வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் செயற்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பஞ்சமுக விநாயகருக்கான விஷேட பூசையும் உள்வீதி வலம் வருதலும் சிறப்பு அர்ச்சனையும் இடம்பெற்றது.

1 2 3