31 வருடங்களின் பின் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்த சிம்பாவே அணி!!

251


Zimbabwe

சிம்பாவே, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் ஹராரேயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாவே அணிகள் நேற்று மோதின.



இந்தப் போட்டியில் 31 வருடங்களின் அவுஸ்திரேலியாவை வெற்றி கொண்ட சிம்பாவே அணி சாதனை படைத்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.



இதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் சிம்பாவே பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் திணறினர். இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.



அவுஸ்திரேலிய அணி சார்பாக பொறுப்பாக விளையாடிய அணித்தலைவர் மைக்கல் கிளார்க் 68 ஓட்டங்களைப் பெற்றார்.


வெற்றிக்கு 210 ரன்கள் தேவை என்ற இலக்குடன் சிம்பாவே அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மாவோயோ, ராசா களமிறங்கினார். இருவரும் அவுஸ்திரேலிய தொடக்க வீரர்கள் பந்துகளை சந்திக்க திணறியது போலவே திணறினார்கள்.

போட்டியின் 12வது ஓவரில் 22 ரன்னில் ராசா ஆட்டமிழக்க மசக்கட்சா களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே மாவோயோ 15 ரன்னில் அவுட்டாக டெய்லர் களமிறங்கினார். டெய்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மஸ்கட்சா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


அணியின் ஓட்டங்கள் 100 ஆக இருந்தபோது மஸ்கட்சா ஆட்டமிழக்க வாலர் களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே டெய்லரும் 32 ரன்னில் ஆட்டமிழக்க வில்லியம்ஸ் களமிறங்கினார். வந்த வேகத்திலேயே வில்லியம்ஸ் பெவிலியன் திரும்ப அணித்தலைவர் சிகும்புரா களமிறங்கினார்.

ஆரம்பம் முதலே சிகும்புரா அடித்து ஆடத் துவங்கிய நிலையில் வாலரும் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். உட்சேயா, சிகும்புராவுடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் அதிரடியாக ஆடி 31 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அவுஸ்திரேலிய அணியை தங்கள் அணி வீழ்த்த காரணமாக இருந்தனர்.

இறுதியில் 48வது ஓவரிலேயே 7 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்து சிம்பாவே அணி வெற்றி பெற்றது.


52 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் சிம்பாவே அணி அணித்தலைவர் சிகும்புரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.