வவுனியாவில் தமிழ் தூது தனிநாயகம் அடிகளார் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

345


வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து நடாத்திய தமிழ் தூது தனிநாயகம் அடிகளார் நினைவுதினம் பஸ் நிலைய வளாகத்தின் முன்னால் நகரசபையால் அமைக்க பட்ட தனிநாயகம் அடிகளார் சிலையடியில் நடைபெற்றது .

தமிழ் மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய பங்கு தந்தை வணக்கத்துக்குறிய சத்தியராஜா அடிகளார், முன்னாள் நகரபிதா திரு.நாதன், முன்னாள் உபநகரபிதா திரு .சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா நகரசபை செயலாளர் திரு.சத்தியசீலன், வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு.நித்தியானந்தன், ஓய்வுபெற்ற பிரதேச செயலாளர் திரு.ஐயம்பிள்ளை, திரு.நா.சேனாதிராசா, திரு.செல்வரத்தினம், ஓய்வுபெற்ற அதிபர் திரு.சிவஞானம், சிலை பாராமரிப்பு செய்யும் வர்த்தகர் சிவசிதம்பரம் மற்றும் வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), மாணிக்கம் ஜெகன் உட்பட சமுக ஆர்வலர்கள், இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



நிகழ்வில் தமிழ் மணி அகளங்கன் தனிநாயகம் அடிகளாரின் பெருமைகளை பற்றி உரையாற்றினார், அவர் தனதுரையில் அவர் கிறிஸ்தவராக இருந்தாலும் சைவ திருமுறை பாடல்களை இனிமையாக உதாரணம் காட்டி பேசுவார் என்றும், திருமூலரின் திருமந்திர வாசகமான “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே” என்ற பதத்தை தனது பேச்சின் தொடக்கமாக கொண்டு இருந்தார் என்றும் மிக நயம்பட உரையாற்றினார்.

அடுத்து வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.நித்தியானந்தன், தனிநாயகம் அடிகளார் பற்றி உரையாற்றினார்.இறுதியில் வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ) நன்றி உரைக்கு முன்பாக வவுனியாவில் தமிழ் பெரியார் சிலைகளை வடிவமைத்த அண்மையில் அமரத்துவம் அடைந்த அமரர் கனகரத்தினம் அவர்களுக்கு ஒரு நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தும்படி கேட்டு கொண்டு பின் வந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி சொல்லி நிகழ்வை முடிவுறுத்தினார்.



DSCN1471 DSCN1472 DSCN1474 DSCN1475 DSCN1477 DSCN1478 DSCN1479 DSCN1480 DSCN1481 DSCN1483 DSCN1486 DSCN1491 DSCN1494 (1) DSCN1494 DSCN1497 DSCN1500