தாயை தத்தெடுக்க முடிவு செய்து இணையத்தில் விளம்பரம் செய்த வாலிபர்!!

310

Mom

சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாயை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். சீனாவின் குயாங்கான் (Guanghan) என்ற பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இணையதளத்தில் தான் ஒரு பெண்ணை தாயாக தத்தெடுக்க விரும்புவதாக நிபந்தனைகளுடன் விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்த விளம்பரத்தில் இவர் விதித்த 4 நிபந்தனைகள்

அந்த பெண் 57 வயது இருக்க வேண்டும்
அவருக்கு நல்ல கல்வி அறிவு இருக்க வேண்டும்.
போதை பொருள் பயன்படுத்துபவராக இருக்க கூடாது
வெளிநாடுகளில் பயணம் செய்த அனுபவம் இருக்க வேண்டும்
இந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப எனக்கு தாயாக இருந்தால் அவருக்கு 1 கோடி பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

விளம்பரத்தின் அருகே பெரிய சிவப்பு விளக்கை பிடித்தபடி அவர் நிற்கும் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது கையெழுத்து, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் வெளியிடப்பட்ட இந்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.