இலத்திரனியல் அடையாள அட்டைக்கு புதிய சட்டம்!!

362

IC

உத்தேச இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும் போது தகவல் பெறவென தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார்.

இதுவரை தகவல் பெற்ற முறைகளிலிருந்து மாறுபட்ட வகையில் தகவல்பெறும் முறை கடைபிடிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைவிரல் அடையாளம் பெறல் போன்ற நடவடிக்கைகளுக்கென சட்ட மாற்றம் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார். தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையில் பல குறைப்பாடுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் புதிய அடையாள அட்டைக்கு பெறப்படும் தகவல்கள் தொடர்பான இரகசியத்தன்மை குறித்து பிரச்சினை காணப்படுவதாக பல தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் 2016ஆம் ஆண்டில் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார்.