வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய தேர்த்திருவிழா!!(படங்கள்)

411

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா கடந்த 28 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

9ம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (05.09) காலை 7.30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று 9.30 மணியளவில் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கப் பெருமான் தேரில் வலம் வந்தார்.

இத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பெருமளவிலான இளைஞர்களும் கலந்துகொண்டனர்.

புதிதாக அமைக்கப்பட்ட இத் தேரானது 25 அடி அளவில் 18 நாட்களில் வடிவமைக்கப்பட்டது விசேட அம்சமாகும்.

இத் தேர்த் திருவிழாவை ஆலய பரிபாலன சபையினருடன் இணைந்து பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினரும் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தனர்.

தொடர்ந்து 10ம் நாளான நாளை (06.09) சனிக்கிழமை தீர்த்தோற்சவமும்1008 சங்காபிசேகமும் இடம்பெறவுள்ளது.

ஆகம கிரியா பாவலர் சிவஸ்ரீ இரவீந்திர உமாசுதக் குருக்கள் பிரதம குருவாக பூஜை வழிபாடுகளை நடத்தவுள்ளதுடன் பிரமஸ்ரீ த.பிரசாந்சர்மா உட்பட பல சிவாச்சாரியார்கள் இணைந்து பூஜை வழிபாடுகளை நடத்தவுள்ளனர்.

-கஜேந்திரன்-

1 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19 20 21 22 23 24