வவு­னியா வடக்கு பிர­தே­சத்தில் அதி­க­ரித்து வரும் மதுப் பாவனையை கட்­டுப்­ப­டுத்த அரச அதி­கா­ரி­க­ளுக்கு செய­ல­மர்­வு!!

316

Smoking

மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட்ட வவு­னியா வடக்கு பிர­தே­சத்தில் அதிக­ரித்து வரும் மது பாவ­னையை கட்டுப்படுத்த அரச அதிகாரிகளுக்கு செய­ல­மர்­வுகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

வவு­னியா வடக்கு பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பிர­தே­சத்தில் வெளிக்­க­ளத்தில் பணி­யாற்றும் அரச உத்­தி­யோகத்­தர்­க­ளுக்கு கிராம மட்­டத்தில் மது பாவ­னையை கட்­டுப்­ப­டுத்தி பொரு­ளா­தார மேம்­பாட்டை அதி­க­ரிப்­ப­தற்­கான வழி­வ­கைகள் தொடர்பில் இதன்­போது தெளிவு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

வவு­னியா வடக்கு பிர­தேச செய­லாளர் க.பரந்­தாமன் தலை­மையில் இடம்­பெற்ற இச் செய­ல­மர்வில் கிரா­மங்­களில் மது பாவ­னையின் அதி­க­ரிப்­புக்­கான கார­ணங்கள், அவற்றால் ஏற்­படும் பொரு­ளா­தார பின்­ன­டை­வுகள் தொடர்பில் வெளிக்­கள உத்­தி­யோகத்­தர்கள் முன்­வைத்த கருத்­து­க­ளுக்கு தீர்­வினை வழங்கும் செயற்­பா­டு­களும் இதன்­போது இடம்­பெற்­றி­ருந்­தன.

இதே­வேளை வவு­னியா வடக்கு பிர­தே­சத்தில் மது பாவனையின் அதிகரிப்புக்கான காரணங்கள் தொடர்பில் பிரதேச செயலாளரினால் கருத்துரைகளும் வழங்கப்பட்டிருந்தன.