வவுனியாவில் இந்தியத் துணைத் தூதரக அனுசரணையுடன் நர்த்தனாஞ்சலி!!

726

Dance

யாழ். இந்தியத் துணைத்தூதரகமானது இந்திய அரசின் கலாசார அமைச்சின் அனுசரணையுடன் வடமாகாணத்தில் கடந்த மூன்று வருடங்களாக கலை நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது.

உள்ளூர் நுண்கலை மாணவர்களுக்கும் மற்றும் கலைஞர்களுக்கும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில்இ இவவருடமும் செப்ரெம்பர் 2014 முதல் பெப்பிரவரி 2015 வரையுள்ள காலப்பகுதியில் நான்கு கலை நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளது.

பாரம்பரிய சாஸ்த்திரீய நடனம் மற்றும் இசையை வடமாகாணத்தில் பயிற்றுவிக்கும் நுண்கலை நிறுவனங்களூடாக இவ்வகையான கலை நிகழ்வுகளை யாழ். இந்தியத் துணைத்தூதரகம் ஒழுங்கு செய்துள்ளது.

யாழ். இந்தியத்துணைத்தூதரக அனுசரணையுடன் வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியினால் ஆற்றுகை செய்யப்படும் மாபெரும் நடன நிகழ்ச்சி வவுனியா நகர சபை புதிய கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் 21 செப்ரெம்பர் 2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

இக்கலை நிகழ்வில் நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியின் 100 மாணவர்கள் வரை நடன அளிக்கை செய்யவுள்ளனர்.

நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரியானது 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சாஸ்த்திரீய நடனம் மற்றும் இசை வகுப்புகளை பயிற்றுவித்து வருகின்றது. நிதி வசதியற்ற ஏழைமாணவர்களுக்கு இலவசமாக இசை நடன வகுப்புகளை நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி பயிற்றுவித்து வருகின்றது.

மேலும் இக்கல்லூரி வடமாகாணத்திலுள்ள ஏனைய மாவட்டங்களிலும் பல கலை நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது.

நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம். அனைத்து கலை ஆர்வலர்களையும் மாணவர்களையும் அன்புடன் அழைக்கின்றனர்.