30 கிலோ நாணயங்களை வரியாக செலுத்திய இளம்பெண்!!

275

Coin

பிரான்ஸ் நாட்டில் பெண் ஒருவர், அரசாங்கம் பொதுமக்களிடம் வசூலிக்கும் அதிகப்படியான வரி விதிர்ப்பிற்கான தனது எதிர்ப்பை காட்ட தனது வரியினை ஆயிரக்கணக்கான நாணயங்களாக செலுத்தியுள்ளார்.

பிரான்ஸில் உள்ள மக்கள் முந்தைய ஆண்டின் வருமானத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் இவர்களுக்கான வரித்தொகையை செலுத்த வேண்டும். இந்நிலையில், ஆட்ரி டி (27) என்ற பெண்ணுக்கு இந்த ஆண்டு 1107 யூரோக்கள் வரித்தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.

இதனை சரியான நேரத்தில் கட்டுவதற்காக தனது காரை விற்ற அவர்வரியைக் கட்ட சென்றபோது ஒரு தவணையில் 300 யூரோக்கள் மட்டுமே கட்டமுடியும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டதால் மூன்று தவணையில் கட்டியுள்ளார்.

மீதமுள்ள 207 யூரோக்களையும் 30 கிலோ கிராம் எடையளவில் நாணயங்களாக மாற்றிச்சென்று அதிகாரி முன் அளித்துள்ளார்.

வரி அலுவலக அதிகாரி முன் இவர் இதனை கொட்டியபோது முதலில் அவரை வித்தியாசமாகப் பார்த்தபோதும் அந்த அதிகாரிகள் பின்னர் இந்த நாணயங்களை எண்ணி ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், அந்த நாணயங்களை வரி அலுவலகத்தில் உள்ளவர்கள் எண்ணி முடிக்க சுமார் 2 மணி நேரம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.