ஸ்கொட்லாந்து பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்வதான வாக்கெடுப்பு தோல்வி!!

288

ஸ்கொட்லாந்து வாக்காளர்கள் பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்து பிரிவதா, இல்லையா என்பது குறித்த வாக்கெடுப்பு நேற்று ஸ்கொட்லாந்தில் நடைபெற்றது.

ஸ்கொட்லாந்தின் பெரிய நகரமான கிளாஸ்கோவில் 53 வீதமானோர் பிரித்தானியாவிடம் இருந்து பிரிந்து செல்வதற்கான வாக்குகள் அதிகமான கிடைத்துள்ளன. 53வீத வாக்காளர்கள் அங்கு சுதந்திரத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

எனினும் ஏனைய இரண்டு பெரிய நகரங்களின் வாக்களார்கள் பிரித்தானியாவிடம் இருந்து பிரிந்து செல்லக்கூடாது என்பதற்கான வாக்குகளை அளித்துள்ளனர்.

எண்ணெய் வள நகரான அபேர்டீனில் 59க்கு 41 என்ற அடிப்படையில் பிரிந்து செல்வதற்கு எதிரான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
எடின்பரோவில் 61வீதமானோர் பிரிவினைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இந்த நிலையில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 31இல் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிபிசியின் எதிர்வுகூறலின் படியும் இறுதி முடிவுகளின் படியும் பிரித்தானியாவில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு 55க்கு 45 என்ற வீதத்தில் தோற்கடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

scotland 1 scotland