வவுனியாவில் தேசிய கலை இலக்கியப் பேரவை நடாத்திய மகாகவி பாரதியின் 93வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கு!!

332

மகாகவி பாரதியின் 93வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கு வவுனியா அனைத்துப் பல்கலைக்கழக அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நேற்று (21.09) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தேசிய கலை இலக்கியப் பேரவையின் உறுப்பினர் திரு.சு.செல்வகுமார் தலைமைதாங்கினார். அத்துடன் ‘‘பாரதி காட்டும் விடுதலை’’ எனும் தலைப்பில் திரு.சு.டொன்பொஸ்கோ – (தேசிய கலை இலக்கியப் பேரவை வவுனியா மாவட்டச் செயலாளர்) அவர்கள் கருத்துரை வழங்கினார்.

‘‘பாரதியின் பாட்டுத்திறம்’’ எனும் தலைப்பில் திரு.ந.பார்த்தீபன் – (சிரேஸ்ட விரிவுரையாளார்- தேசிய கல்வியற் கல்லூரி) அவர்கள் கருத்துரை வழங்கினார்.

செம்மலர் கலைக்குழுவினால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன் இன் நிகழ்வில் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், முற்போக்கு இலக்கிய சக்திகள் உபட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

DSC01812 DSC01830 DSC01831 DSC01840 DSC01844 DSC01867 DSC01875 DSC01876