வவுனியா மாவட்ட கலை இலக்கிய விழா!!

485

வவுனியா மாவட்ட கலை இலக்கிய விழா மாவட்ட கலாச்சார மண்டபத்தில் நேற்று(23.09) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காலை வவுனியா நகரபை மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிகழ்வில் இசை, நடனம், கலை கலாசார செற்பொழிவுகள் ன்பன இடம்பெற்றிருந்தன.

தொடர்ந்து பிற்பகல் ஒரு மணியளவில் வவுனியா மகாவித்தியாலய வீதியிலிருந்து பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உடைகள் அணிந்து பவனியாக சென்றனர்.

அத்துடன் மங்கள இசையுடன் காவடி, கோலாட்டம், கண்டியர் நடனம், போன்ற நிகழ்வுகளுடன் நடைபயண ஊர்வலம் வவுனியா நகர சபை கலாசார மண்டபம் நோக்கிச் சென்றது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள், சமுகஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

21 22