வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்திய விசேடவிவாதப் பயிரலங்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்!!

752

கலை இலக்கிய ரீதியில் தனதுகாத்திரமான பங்களிப்பை ஆற்றிவரும் தமிழ் மாமன்றம் இதனது இரண்டாவது வருட பயணத்தினுடைய ஆரம்ப செயற்பாடாக வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான விசேட விவாதப் பயிரங்கு ஒன்றினை நேற்றையதினம் (27.09.2013 சனிக்கிழமை) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடாத்தியது.

சென்ற வருடத்தில் வவுனியா மாவட்டதின் 21 பாடசாலைகளுக்கு 7 கட்டமான விவாதப் பயிலங்குகளையும் பயிலரங்கின் பெறுபேற்றை பரீட்சிக்கும் ‘வன்னியின் வாதச்சமர் 2013’எனும் மாபெரும் விவாதப் போட்டியையும் நடாத்திய அனுபவத்துடன் தமிழ் மாமன்றத்தின் மாபெரும் கலைவிழாவான ‘இயல் விழா 2014’ வவுனியாவில் மிகசிறப்பாக நடாத்திய பெருமிதத்துடனும் இதனது இரண்டாம் கட்ட நகர்விற்கு தயாராகியுள்ளது.

இவ் வருடத்திற்கான தமிழ் மாமன்றத்தின் ‘வன்னியின் வாதச்சமர் 2014’ எனும் மாபெரும் விவாதப் போட்டியை முன்னிட்டு இவ் விவாதப் பயிரலங்கு 27.09.2013 அன்றுஒ ழுங்குசெய்யப்பட்டது.

காலை 9 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர் இரத்தினம் நித்தியானத்தன் அவர்கள், தமிழாசிரியர் ஐ.கதிர்காமசேகரன் அவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் மாமன்ற உறுப்பினர்கள் தமிழ் ஆர்வலர்கள் என பலதரப்பட்டோர் கலந்துகொண்டனர்.

வன்னியின் வாதச்சமர் 2013 இல் காலிறுதிக்கு தெரிவான அணிகளுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.

001 002 003 006 008 009 010 011 012 013 014 018 019 020 022