நடுவர்களின் சதியால் பதக்கத்தை இழந்து கதறி அழுத வீராங்கனை!!

307


Ind

ஆசிய விளையாட்டு போட்டியில் நடுவர்களின் சதியால் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவியின் தங்கப்பதக்க கனவு தகர்ந்தது.



தென் கொரியாவின் இன்ச்சானில் ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் பெண்கள் குத்துச்சண்டை (60 கி.கி) பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சரிதா தேவி, தென் கொரியாவின் ஜினா பார்க்கை சந்தித்தார்.

ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய சரிதா வெல்வார் என்ற நிலையில், ஜினா 3–0 என வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்து அதிர்ச்சி தந்தனர்.



இந்த முடிவை எதிர்த்து 30 ஆயிரம் செலுத்தி இந்தியா சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. ஆனால், சர்வதேச குத்துச்சண்டை சங்க விதிமுறைப்படி களத்தில் இருக்கும் நடுவர்கள் முடிவை மட்டுமே எதிர்க்க முடியும்.



களத்துக்கு வெளியே அமர்ந்து புள்ளிகள் வழங்கும் நடுவர்களுக்கு எதிராக அப்பீல் செய்ய முடியாது. இதையடுத்து இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கடைசியில் இறுதி வாய்ப்பை இழந்த சரிதா, வெண்கலப்பதக்கத்துடன் கண்ணீர் மல்க விடைபெற்றார்.


கண்ணீருடன் வெளியேறிய சரிதா தேவி கூறுகையில், எனக்கு நடந்த அநீதியைப்போல, வேறு யாருக்கும் ஆசிய விளையாட்டில் நடக்கக்கூடாது. எனது குழந்தையை பிரிந்து பயிற்சி மேற்கொண்டேன்.

இந்த கடின உழைப்பு எல்லாம் வீணாகிவிட்டது. நடுவர்களின் முடிவு மிகுந்த கவலை அளிக்கிறது.ஜினாவுக்கு தான் வெற்றி என ஏற்கனவே முடிவு செய்த நிலையில், எதற்காக போட்டியை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.