ஜெயலலிதாவின் பிணை மனு ஒத்திவைப்பு : கட்சித் தொண்டர்கள் ஏமாற்றம்!!

622

crying

ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை மீண்டும் ஒக்டோபர் 7ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்ய அரசு வக்கீல் பவானி சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜெயலலிதாவை விடுவிக்க எதிர்ப்பு ஏன் என விளக்கி பவானி சிங் மனுத்தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரத்தினகலா ஒக்டோபர் 7ம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

தசரா விடுமுறை முடிந்து வழக்கமான அமர்வு மனுவை விசாரிக்கும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

பிணை மனு ஒத்திவைப்பால் ஒக்டோபர் 7ம் திகதி வரை ஜெயலலிதா சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.