மீண்டும் சூடுபிடிக்கும் மலேசிய விமான தேடுதல் வேட்டை!!

274

FLightமாயமான மலேசிய

விமானத்தை தேடும் பணி மீண்டும் தீவிரமடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 8ம் திகதி கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பிஜீங் சென்ற MH370 விமானம் திடீரென நடுவானில் மாயமானது.

இதனையடுத்து இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு கூறியதன் பேரில் சர்வதேச நாடுகளான அமெரிக்க, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பூளூபென் நீர்மூழ்கி கப்பலின் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

ஆனால் அங்கு விழுந்தது விமானத்தின் பாகங்கள் இல்லை என பின்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் விமானத்தைத் தேடும் பணியில் ஜிஓ ஃபீனிக்ஸ் (GO Phoenix) மற்றும் ஃபூயுக்ரோ டிஸ்கவரி (Fugro Discovery) என்ற இரண்டு கப்பல்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

இந்த இரண்டு கப்பல்களும் மேற்கு அவுஸ்திரேலியப் பெருங்கடல் பகுதியில் இருந்து விமானம் விழுந்ததாகக் கருதப்படும் முக்கிய இடத்துக்கு புதன்கிழமை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஃபூயுக்ரோ ஈக்வேட்டர் (Fugro Equator) எனும் மற்றொரு ஆய்வுக் கப்பல் இந்த மாதத்தின் இறுதியில் விமான பாகங்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தபடவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் மாயமான விமானத்தை கண்டுபிடிக்க வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.