ஜெயலலிதாவின் பிணை மனு மீது இன்று விசாரணை : பிணை கிடைப்பதில் சிக்கல்!!

261

Jeya

முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பிணை கோரினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிடைக்காமல் செய்வேன் என்று அறிவித்த சுப்பிரமணிய சுவாமி அதன்படியே நேற்று புதிய மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

சுப்பிரமணிய சுவாமியின் இந்த புதிய மனுவால் ஜெயலலிதாவுக்கு பிணை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பின்படி பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதா பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இம்மனு மீதான விசாரணை இன்று வருகிறது. விசாரணையின் முதல் நாளே பிணை கிடைக்குமா அல்லது தள்ளிப்போகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு குறித்து முதன் முதலில் வழக்கு தொடுத்த சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் “ஜெயலலிதாவுக்கு பிணை வழங்குவது குறித்து மனுதாரர் என்பதால் என்னுடைய கருத்தையும் கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு பிணை கோரினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிடைக்காமல் செய்வேன் என்று கூறிவந்த சுப்பிரமணிய சுவாமி அதன்படியே நேற்று புதிய மனுவை தாக்கல் செய்துவிட்டார்.

சுப்பிரமணிய சுவாமியின் இந்த புதிய மனுவால் ஜெயலலிதாவுக்கு பிணை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு சார்பில் அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் ஆஜராக வேண்டும். இதுகுறித்து பவானிசிங் கூறியதாவது.

“சொத்து குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக நான் நியமிக்கப்பட்டு இது தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வருகிறேன். பெங்களூர் தனி நீதிமன்றில் ஆஜரானேன். கர்நாடக மேல் நீதிமன்றில் ஆஜராகி வாதிட்டேன். இப்போது உயர் நீதிமன்றில் எதிர்தரப்பினர் பிணை மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு இன்று 17ம் திகதி விசாரணைக்கு வருவதாக பத்திரிகைகளில் செய்தி படித்தேன். இதில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்றத்தில் இருந்து இதுவரை (புதன்கிழமை மாலை வரை) எனக்கு நோட்டீசு வரவில்லை. வந்தால் உச்ச நீதிமன்றில் ஆஜராவேன். இவ்வாறு அரசு சிறப்பு சட்டத்தரணி பவானிசிங் கூறினார்.