சாதாரணதரப் பரீட்சை திட்டமிட்டபடி டிசம்பர் 09ம் திகதி முதல் 18ம் திகதி வரைநடைபெறும்!!

410

OL

2014ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி மாற்றங்கள் எதுவுமின்றி டிசம்பர் 09ம் திகதி முதல் 18ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்த நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தால் நேற்று வெளியிடப்பட்டது.

இதேவேளை, 2015ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தகவல் தொழிநுட்பப் பரீட்சைகள் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த பரீட்சை 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை இடம்பெறும் என, இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடுபூராகவுமுள்ள 1176 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ள இந்தப் பரீட்சையில், ஒரு இலட்சத்து 49,784 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

பரீட்சைகளுக்கான அனுமதிப்பத்திரம் கிடைக்காத மாணவர்கள் 0112 784 208 அல்லது 0112 784 537 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கைவிடுத்துள்ளது.