அமெரிக்காவில் மருத்துவருக்கு எபோலா வைரஸ்!!

278

Doctor

அமெரிக்காவில் மருத்துவர் ஒருவருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

ஆபிரிக்க நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது எபோலா என்னும் உயிர்கொல்லி வைரஸ்.
இந்நோயினால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மற்ற நாடுகளிலும் இந்நோய் பரவிவிடாத வண்ணம் உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முன்னெச்சரிக்கையாக மேற்கு ஆபிரிக்கா நாடுகளில் இருந்து தங்கள் நாடுகளுக்கு வருபவர்களை தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மருத்துவர் கிரேக் ஸ்பென்சர் என்பவருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே அவரை மருத்துவமனையில் தனி வாட்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கினியா நாட்டில் மருத்துவ பணிகளில் ஈடுபட்டிருந்த கிரேக், கடந்த 14ம் திகதி நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.