வவுனியா வர்த்தகர் சங்கத்தினரால் கொஸ்லந்தை பகுதி மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!!

435


வவுனியா வர்த்தசங்கத்தின் ஒழுங்கமைப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அனுசரணையில் சேகரிக்கப்பட்ட 15 இலட்சம் பெறுமதியான நிவாரண பொருட்கள், பதுளை உறவுகளுக்காக நேற்றைய தினம்(22.11) வவுனியா மாவட்ட வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு.ரி.எஸ்.இராசலிங்கம் தலைமையிலான குழுவினரால் மக்களிடம் நேரடியாக கையளிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் இவ் நிகழ்வுகளில் பூனாகல பிரதேச செயலாளரும் கலந்து கொண்டிருந்தார். இக் குழுவில் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) தலைவரும் தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் திரு.எஸ்.தியாகராசா, வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்),



வர்த்தக சங்கத்தின் இயக்குனர் குழு உறுப்பினர் வாடி வீடு அதிபர் கதிர்காமராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) நோர்வே அமைப்பாளர் ராஜன், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், கழக உறுப்பினர் திரு ந.தினேஷ் ஆகியோருடன் நிகழ்வுகளில் பூனாகல பிரதேச செயலாளரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இயற்கையின் சீற்றத்தால் உயிர்கள் உட்பட உடைமைகளையும் இழந்து சொல்லொனா துயரத்தில் வாடும் கொஸ்லந்த மீரியபெத்த உறவுகள் தங்க வைக்கப்பட்டுள்ள மாகந்த தொழிற்சாலைக்கு முதலில் தமது நிவாரண பொருட்களுடன் சென்ற குழுவினர், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 78 குடும்பங்களுக்கான நிவாரண பொருட்களை கையளித்தனர்.



தொடர்ந்து தியகல, மீரியபெத்த போன்ற பகுதிகளில் அபாய எச்சரிக்கை விடப்பட்ட பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பூனாகல தமிழ் மகா வித்தியாலயத்தில் உள்ள 72 குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் வர்த்தக சங்கத்தினர் மற்றும் இணைந்த குழுவினரால் மக்களிடம் நேரடியாக கையளிக்கப்பட்டது.



தொடர்ந்து அபாய எச்சரிக்கை விடப்பட்ட பூனாகல தொழிற்சாலைப் பிரிவைச் சேர்ந்த 39 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் எதிரொலி விளையாட்டு மைதானத்துக்கான பொருட்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தினூடாக கையளிக்கப்பட்டது.


22.11.2014 அன்று எச்சரிக்கை விடப்பட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டு கீழ்ப்புற லுணுகல தோட்ட பிரிவைச் சேர்ந்த 58 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபா வீதம், பிள்ளையார் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களிடம் வர்த்தக சங்கத்தினர் மற்றும் இணைந்த குழுவினரால் நேரடியாக கையளிக்கப்பட்டது.

1 (50) 1 (51) 1 (52) 1 (54) 1 (57) 1 (63) 1 (66) 1 (70) 1 (86) 1 (91) 1 (92)


21