வவுனியாவில் கணவனை இழந்து வறுமையில் வாடும் இரு பெண் குடும்பங்களுக்கு உதவிய அமரர்.மு.சொக்கலிங்கம் குடும்பம்!!

292


வவுனியா ஈஸ்வரி புரத்தில் வசிக்கும் 34 வயதுடைய துஷ்யந்தினி மேசன் வேலைக்கு முல்லைத்தீவு சென்ற கணவன் கருப்பண்ணன் முத்துசாமிபிள்ளை 2009 யுத்தத்தில் எறிகணை வீச்சில் இறந்து விட மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளானார்.

கணவரின் சடலம் கூட கிடைகாதநிலையில் இறப்பு சான்றிதழ் கொடுக்க பட வாழ்வில் செய்வதறியாது தனது ரச்னிகா என்ற 10 வயது மகளுடன் ஈஸ்வரிபுரத்தில் வசித்து வருகிறார் .



தனது மகளை காப்பாற்ற கூலி வேலைக்கு செல்ல முடிவு செய்த போது தைரோக்சின் வருத்தத்தால் பாதிக்க பட்டு அடிகடி கால்கள் வீங்க கிளினிக் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட மிகுந்த வறுமையுடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது .

அதே போல் ஈஸ்வரி புரத்தில் வசிக்கும் புஸ்பகுமாரி வயது 31 தனது கணவர் கருப்பையா ரவி 38 வயதிலேயே சிறுநீரகம் பாதிக்க பட்டு 2014.06.17 இல் இறந்து விட கயிந்தா வயது 13 ,மிருசா வயது 10, தனோயா வயது 05 இந்த 3 பெண் பிள்ளைகளுடன் மிகுந்த கஷ்ட பட்டு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது .
மூன்றும் பெண்பிள்ளைகள் அவர்களை வீட்டில் தனிமையில் விட்டு கூலி வேலைக்கு கூட செல்ல முடியாத நிலையில்



துஷ்யந்தினியும் ,புஸ்பகுமாரியும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன் உடன் 5 நாட்களாக தினமும் தொடர்பு கொண்டு தமக்கு குறைந்த பட்சம் அரிசி ,மா உட்பட்ட சாப்பாடு சாமான்கள் வாங்கி தரும்படி கேட்டு கொண்டார்கள்.



அதன் பிரகாரம் சுவிஸ் இல் வசிக்கும் அமரர் மு.சொக்கலிங்கம் குடும்பத்தை தொடர்பு கொண்ட தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர் மு.சொக்கலிங்கம் அவர்களின் குடும்பத்தின் நிதி அனுசரணையில் அவரின் 7ம் ஆண்டு நினைவாக அரசி, மா, பருப்பு, கிழங்கு, டின் மீன், அங்கர், சீனி, தேயிலை, வெங்காயம் என இரு குடும்பத்துக்கும் ஒரு மாதத்துக்கு தேவையான உலர் உணவு பொதிகள் 24.11.2014 அன்று வழங்கி வைக்கப்பட்டன.


அமரர் மு.சொக்கலிங்கத்தின்7ம் ஆண்டு நினைவாக நினைவாக அவரின் குடும்பத்தினரால் வழங்க பட்ட இந்த உதவியை தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் )செயலாளர் மாணிக்கம் ஜெகன் ,சமூக ஆர்வலர் சர்மிலன் ஆகியோர் நேரடியாக சென்று வழங்கி இருந்தனர் .

எமக்கு தக்க தருணத்தில் உதவிய அமரர் மு.சொக்கலிங்கம் குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்து கொண்ட இருவரும், எங்கள் இருவருக்கும் பெண் பிள்ளைகள் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் .எமது பெண் பிள்ளைகளின் நிலை கருதி எமக்கு ஒரு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு தாங்கள் தமிழ் விருட்சத்திடம் மட்டும் அல்ல, புலம் பெயர் உறவுகள், உதவும் மனம் கொண்டவர்களிடம் கேட்டு கொள்வதாகவும் குறிப்பிட்டனர்.


DSCN2608 DSCN2612 DSCN2616 DSCN2618 DSCN2620 DSCN2621 DSCN2622 DSCN2623 DSCN2625 DSCN2626