வவுனியாவில் தொடரும் குரங்குகளின் சேட்டைகள்!!(படங்கள், வீடியோ )

299


வவுனியாவில் நீண்ட காலமாக குரங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகின்றமை யாவரும் அறிந்த விடயம். குரங்குகளின் சேட்டைகள் அதிகாலை முதல் மாலை வரை தொடர்ந்தவண்ணம் உள்ளது. கோவில்கள் பாடசாலைகள் வீடுகள் கடைகள் வங்கிகள் நிறுவனங்கள் என வேறுபாடின்றி சகல இடங்களிலும் தமது கைவரிசையை காட்டிவருகின்றன.

கடைகள் வீடுகளினுள் புகுந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியும் களவாடியும் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றன . கூட்டமாக கிளம்பும் குரங்குகள் மரங்கள் அவற்றில் காணப்படும் காய்கள் பழங்கள் முதலியவற்றை நாசப்படுத்தியும் செல்கின்றன.



வீடுகள் மற்றும் வீதிகளில் நிறுத்தி வைதிருக்கும் வாகனங்களும் அவற்றின் பார்வையில் இருந்து தப்பிவிடுவதில்லை . அவற்றிலும் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றன. வவுனியாவின் பல பிரதேசங்களிலும் நகரம், கோவில்குளம், இறம்பைக்குளம், சின்னபுதுகுளம் சூசைபிள்ளையார் குளம், பண்டாரிக்குளம் வைரவபுளியங்குளம், குடியிருப்பு, கூமாங்குளம் என வவுனியாவின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று தங்களது சேட்டைகளை செய்துவருகின்றன.

தோட்டங்களில் கூட்டமாக சென்று காய்கறிகள், பழங்கள், வாழைமரங்கள் என்பவற்றையும் சேதபடுத்தி விவசாயிகளின் வயிற்றிலுமடித்து வருகின்றன. இதனால் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளன. பொதுவாக வீடுகளில் உள்ள தண்ணீர் தாங்கிகளின் மூடிகளை கழற்றி செல்வதனால் பெருமளவிலான குடியிருப்பாளர்கள் இவற்றின் செயலால் விசனமடைந்துள்ளனர்.



அத்துடன் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள கைத்தொலைபேசிகள், அவற்றுக்கான சார்ச்சர்கள் மற்றும் கணனிகள், கணணி உதிரிபாகங்கள், மவுஸ், கிபோர்ட், பிரிண்டர்கள் என்பவற்றையும் களவாடியும் சேதபடுத்தியும் வருகின்றன. மேற்படி பிரச்சனைகளுக்கு யாரிடம் முறைப்பாடு செய்வது என தெரியாமால் பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர் .



-பண்டிதர்-


11 12 13 14