இறந்தது போல் நடித்து தீவிரவாதிகளிடமிருந்து உயிர் பிழைத்த மாணவனின் திக் திக் நிமிடங்கள்!!

268

ராணுவ பள்ளியில் தலிபான்கள் தாக்குதல் நடத்திய போது இறந்தது போல் நடித்து உயிர் பிழைத்தது பற்றி மாணவன் விவரித்துள்ளார்.

பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள இராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த 6 தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 132 மாணவர்கள் உட்பட 141 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருகால்களிலும் குண்டு பாய்ந்த நிலையில் ஷாரூக் கான் என்ற 16வயது மாணவர் உயிர் பிழைத்துள்ளார்.

தற்போது பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவிலிருக்கும் இந்த மாணவர் அளித்துள்ள பேட்டியில், நானும் என் சக தோழர்களும் பள்ளியில் கரியர்-கைடன்ஸ் பாட அமர்வில் இருந்தோம்.

அப்போது ராணுவத்தினர் போல் உடையணிந்து கொண்டு நுழைந்த 4 பேர் கடவுளின் பெயரைக் கூறி சுடத் தொடங்கினர். அந்த நேரத்தில் எங்கிருந்தோ ஒரு குரல் மேசையின் அடியில் ஒளிந்து கொள்ளுமாறு எங்களை நோக்கி கேட்டதையடுத்து நாங்களும் ஒழிந்து கொண்டோம். எனினும் அவ்வாறு ஒளிந்து கொண்டதில் இருவர் பலியாகியுள்ளனர்.

எனது அருகில் மிகப்பெரிய சப்பாத்துகளை அணிந்த கால்கள் வந்தன, இவர் தான் மேசைக்கு அடியில் ஒளிந்திருக்கும் மாணவர்களை பிடிக்க வந்தவர் என்று நினைத்தேன்.

எனது இரு கால்களிலும் குண்டுகள் பாய்ந்தது, நான் எனது கழுத்து டையை மடித்து வாயில் சொருகிக் கொண்டு, கண்களை மூடி இறந்துபோனது போல் நடித்தேன். என்னை அவர்கள் சுட்டுக் கொன்று விடுவார்கள் என நினைத்தேன், ஆனால் அவர்கள் மறுபடியும் சுடவில்லை.

இதன்பின் நான் எழுந்திருக்க முயன்றேன், ஆனால் கீழே விழுந்தேன். அடுத்த அறைக்கு நகர்ந்தே தான் சென்றேன், அங்கு நான் கண்ட காட்சி பயங்கரம். எங்கள் கல்வி நிறுவன அலுவலக ஊழியர் ஒருவர் உடல் எரிந்து கொண்டிருந்தது.

மேலும் நாற்காலியில் அமர்ந்திருந்த அவரது உடலிலிருந்து ரத்தம் வந்தபடி இருந்ததை பார்த்த மயங்கி விழுந்த நான் கண் விழிக்கும் போது மருத்துவமனையில் இருந்தேன் என தெரிவித்துள்ளார்.

pak pak1 pak3