இலங்கைப் பெண்ணின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு தமிழக அரசாங்கத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!!

293

court

இலங்கைப் பெண் ஒருவர் விடுத்துள்ள கோரிக்கையை மீளவும் பரிசிலீக்குமாறு சென்னை மேல் நீதிமன்றம் தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

விடுதலைப்புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது கணவரை விடுவித்து தாமும் அவரும் இலங்கையில் சென்று குடியேற அனுமதிக்க வேண்டும் என்று கோரி இலங்கைப் பெண்ணொருவர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த டிசம்பர் 15ஆம் திகதியன்று இதுதொடர்பான மனுவை பிரசாந்தி என்ற இலங்கை பெண் தாக்கல் செய்தார்.
அதில் இலங்கையில் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் தமது கணவர் தப்பிவந்து தமிழகத்தில் குடியேறியதாக மனுதாரர் பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தமக்கு திருமணமாகி இரண்டு மாதங்களே சென்ற நிலையில் தமது கணவர் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலைப்புலி என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேவேளை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து வந்துள்ள அழைப்புக்கு இணங்கி தாம் இலங்கையில் சென்று குடியேற விரும்புவதாக மனுதாரர் கோரியுள்ளார்.

இந்நத நிலையில், பரிசீலனை இரண்டு வாரத்துக்குள் இடம்பெற வேண்டும் என்று தமிழக அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.