கேரளாவை வீழ்த்தி ஐ.எஸ்.எல் கிண்ணத்தை கைப்பற்றிய கொல்கத்தா அணி!!

251

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

இந்திய பிரபலங்கள் பலரின் கால்பந்து அணிகள் பங்கேற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப்போட்டி மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது.

இதில் பலம் வாய்ந்த கங்குலியின் அணியின் கொல்கத்தா அணியும், சச்சினின் கேரளா அணியும் மோதின. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சி செய்தனர்.

இதன் பயனாக இரு அணிகளுக்கும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், கோல்கீப்பர்கள் அருமையாக செயல்பட்டு அனைத்து வாய்ப்புகளையும் வீணடித்தனர். ஆகவே, 90 நிமிடம் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.

இதனால் இரு அணிகளுக்கும் தலா 3 நிமிடங்கள் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது. இதில் எந்த அணி கோல் அடித்தாலும் அத்துடன் போட்டி நிறைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அந்த 6 நிமிடத்தின் கடைசி நேரத்தில் கார்னரில் இருந்து அடித்த பந்தை கொல்கத்தா வீரர் மொகமது ரபீக் அருமையாக தனது தலையால் முட்டி கோலாக்கினார்.

இதன்மூலம் கங்குலியின் கொல்கத்தா அணி ஐ.எஸ்.எல். கால்பந்தின் முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

C3 C1 C2