கோவில்குளம் சிவன் ஆலயத்தின் சமூகப்பணியின் இன்னொரு சகாப்தம் ! சிவன் முதியோர் இல்ல புதிய கட்டிட திறப்புவிழா (படங்கள் வீடியோ )

1050

சிவன் முதியோர் இல்ல புதியகட்டிட தொகுதியின்   திறப்பு விழா இன்று 21/01/2014 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் எல்லப்பர் மருதங்குளத்தில்  சிவன் முதியோர்இல்லத்தில்அமைக்கபட்ட புதிய கட்டிடதொகுதி நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திறந்து வைத்து அருளாசி வழங்கிய நிகழ்வு இடம்பெற்றது .வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின்  அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் அமைக்கபட்ட இந்த முதியோர் இல்லத்தில் தற்போது 180 க்கு மேற்பட்ட் முதியவர்கள் வசித்துவருகின்றனர்.

மேற்படி நிகழ்வு மங்கல தவில் நாதஸ்வர   கலைஞர்கள்  மற்றும் அருளகம் சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறுவர் சிறுமியர் இருபுறமும் நின்று விழா அதிதியான நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமா சாரிய சுவாமிகள் அவர்களை வரவேற்று பின்னர் சுவாமிகள் புதிய கட்டிடத்துக்கு முன்னால் சைவ சமய முறைப்படி நந்தி கோடியை ஏற்றி தொடர்ந்து நாடாவினை வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் . அதனை தொடந்து மங்கல விளக்கினை  சுவாமிகள் ஏற்றி வைக்க தொடர்ந்து அந்தணர் பெருமக்கள் மற்றும் வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திர்கொவில் அறங்காவலர் சபையின் தலைவர்  சபாநாதன் மற்றும்  செயலாளர்  ஆ. நவரட்னராஜா நயினை நாகபூசணி அம்பாள் தேவஸ்தான அறங்காவலர் சபை தலைவர் திரு .ஆறுமுகம் தியாகராஜா மற்றும்   மாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன் மரணவிசாரணை அதிகாரி கிசோர் ஆகியோரும்  ஏற்றிவைத்தனர் . தொடந்து கோவிலின் அறங்காவலர்சபை  உறுப்பினரான திரு ஆ.உமாதேவன் அவர்களால் பஞ்ச புராணம் ஓதப்பட்டு அருளகம் சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறுமிகளின் வரவேற்பு நடனத்துடன் இன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின .

வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில்  அறங்காவலர் சபையின் செயலாளர் திரு ஆ  நவரட்ணராஜா அவர்களால்  வரவேற்புரையையும் தலைமையுரையும்  நிகழ்த்தபட்டது .

தலைமையுரையில் வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேச்வர் ஆலயத்தின் அறப்பணி மற்றும் சமூகப்பணி என்பன தொடர்பாகவும் தாம் சிறுவர்களை பராமரிப்பதற்கு அருளகம் என்னும் சிறுவர் இல்லத்தையும் முதியவர்களை பேணுவதற்கு  சிவன் முதியோர் இல்லம் என்னும் அமைப்பையும் அதேபோல்  கால்நடைகள் பசுக்கள் போன்றவற்றை பராமரிப்பதர்ற்கு  பசுவனம் என்னும் கால்நடை பராமரிப்பு அமைப்பையும் உருவாக்கி அதனை திறம் பட நடாத்தி வருவதாக குறிப்பிடிருந்தார். சிவன்கோவில் ஒன்றினால் அல்லது கோவில்களினால்  செய்யகூடிய அறப்பணி அத்துடன் இணைந்து இந்த சமூக பணியையும் தாம் செய்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர் சிவன் முதியோர் இல்லத்தின  தோற்றம் பற்றியும் தந்து தலைமையுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

எமது சமுதாயத்தில் ஆதரவற்று நிர்க்கதியாகவுள்ள முதியோர்களைப் பாதுகாக்க வேண்டியது சமூகக்கடமை. அந்த உணர்வோடு முதியோர்களுக்கான ஓர் இல்லம் அமைக்கப்பட வேண்டும் என்ற  எண்ணம் ஆலய நிர்வாகசபையினருக்கு இருந்து வந்தாலும்  2௦௦9 இல் நாட்டில் இடம்பெற்ற பிரச்சினைகளால் பாதிப்புற்று கைவிடப்பட்ட நிர்க்கதியான முதியோர்களின் வருகையால் அந்த தேவை, எண்ணம் உடனேயே பூர்த்தி செய்யப்பட வேண்டியதாயிற்று.

ஏற்கனவே 2௦௦1  புரட்டாதி  மாதத்தில் ஆலயத்தால்  ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வந்த ஆண்,பெண் சிறுவர் இல்லங்களால் ஆலயத்திற்கு நற்பெயரும், சமுதாய மதிப்பும் ஏற்பட்டிருந்தமையால் 2௦௦9 ஆம் ஆண்டு  இடம்பெற்ற வன்செயலால் பாதிக்கப்பட்டு  ஆதரிப்பார் யாருமின்றி கைவிடப்பட்ட,சுமார்  250 முதியவர்களை வன்னியின் பாதுகாப்பு படை அதிகாரிகள் அழைத்து வந்து சிவன்கோவிலில் ஒப்படைத்தனர். அதனால் முதியோர் இல்லத்தை உடனடியாக ஆரம்பிக்கவேண்டிய தேவை உருவாயிற்று. அதன் காரணமாக வவுனியா சமணங்குளம் அ.த.க. பாடசாலையில் அம்முதியோர்களைத் தங்கவைத்து சிவனாலயம் பாதுகாத்து, பராமரித்து வந்தது.

தொடர்ந்து அரசாங்கம் இம் முதியோர் இல்லத்திற்கான தேவையை உணர்ந்து வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் வழங்கிய காணியில் தற்காலிகமான குடில்கள் அமைக்கப்பட்டு ஏ’ற்கனவே இருந்த முதியவர்களுடன் பிள்ளைகளால் உறவுகளால் கைவிடப்பட்ட முதியோர்களையும் தங்கவைத்து அவர்களுடைய தேவைகள்,படுக்கை வசதிகள்  முக்கியமாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு பேணிப் போஷிக்கப்பட்டனர். இதற்கு அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகளும் பங்களிப்பும் தூண்களாகி உதவின.

ஆனால் காலஞசெல்லச் செல்ல நிரந்தரக் கட்டிடம் அமைக்க வேண்டிய தேவை அதிகரித்ததனால் வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் ஆலய நிர்வாகசபையினால் ஆலய நிதியிலிருந்து புதிய நிரந்தரக் கட்டிடம் முதியோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தொகை பணச்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள கட்டிடத் தொகுதியில் கீழ்த்தளம் பூரணமாகத் தற்போது அமைக்கப்பட்துள்ளது. பெருந்தொகை பண செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமா சாரிய சுவாமி அவர்களால்  ஆசியுரை வழங்கப்பட்டது. சுவாமிகள் தனது உரையில் முதியோர்களை பேணிபாதுகாத்தலின்  அவசியம் பற்றியும் ஒவ்வொருவருக்கும்  முதியோர்கள் பெரியோர்களது  ஆசிர்வாதம் கட்டாயம் அவசியம் எனவும் மேற்படி திருகோவிலின்  செயல்பாடுகளும் அறப்பணி மற்றும் சமூகப்பணி தொடர்பாக தான் இதுவரை வேறெங்கிலும் கண்டதுமில்லை.கோவில்குளம் சிவன் ஆலயம் எண்கள் சைவ பெருமக்களின் வாழ்க்கை நெறிக்கு முன்னுதாரணமாக திகழ்வதை எண்ணி தான் பெருமிதமடைவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் ஆலயத்தின் சிறுவர் முதியோர் மற்றும்பசுக்கள் முதலியவற்றை பாராமரிக்கும் செயல்பாட்டை  காவோலைக்கும் குருத்தோலைக்கும் வாழ வழிவகை செய்வதோடு நின்று விடாமல்   கால்நடைகளையும்  பேணுகின்ற இச்செயலானது மிகவும் உன்னதமானது என்றும்  இலங்கையிலே  இங்குதான் இவ்வளவு இடர்கள் கஷ்டங்கள் சிரமங்களை கண்டு துவண்டுவிடாது தொடர்ந்து இந்த ஆலய அறங்காவலர் சபையினர்  சமூக பணியில்  தமக்கென ஒரு பாதையில் ஒற்றுமையுடன் செயல்படுவதாகவும் சில காரியங்களை சொல்வது எளிது செயல்படுத்துவது மிக கடினமானது எனவும் இருந்த போதும் வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேச்வர் திருகோவிலின் இப்பணி தொடர தானும் கடவுளுடைய அனுக்கிரகம் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் பிரார்த்திப்பதாக தனது ஆசியுரையை வழங்கினார் .தொடந்து சுவாமி அவர்கள் சிவன் முதியோர் இல்லத்துக்கு ஒரு வாழ்த்து பாவினை அறங்காவலர் சபை தலைவரான சபாநாதனிடம் வழங்கினார் ..

அதனை தொடர்ந்து அருளகம் சிறுவர் இல்லத்து   சிறுவர் சிறுமியரதும் முதியோர் இல்லத்து முதியவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன . அத்தோடு மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் மற்றும் முதியோர்  தொடர்பான நலன்களுக்கு பொறுப்பான சமூக சேவைகள் அமைச்சின் அலுவலர் உரையும்  திரு அகளங்கன் அவர்களது உரையும் தொடர்ந்து சட்டத்தரணி தயாபரனின் உரையும் அத்துடன் கிறிஸ்தவ பாதிரியார் அவர்களது உரையும் இடம்பெற்றன .

இறுதியில் அறங்காவலர் சபையை சேர்ந்த ஆ.உமாதேவன் அவர்களால் நன்றியுரை வழங்கபட்டது .அவர் தனது நன்றியுரையில் எங்கோ பிறந்த நாம் வியாபர மற்றும் தொழில் நிமித்தம் இங்கு வந்துள்ள நாம் இவ்வாறான அறப்பணி மற்றும் சமூகப்பணியில் இணைந்து செயலாற்றுவதற்கு முற் பிறப்பில் பெரும் புண்ணியம் செய்தமையினாலோதானோ தெரியவில்லை இப்பிறவியிலும் இந்த மகத்தான பணிய யாரோ ஆட்டுவிக்கின்றார்  நாம் செயல்படுகிறோம்  நாம் வெறும் கருவிதான் எல்லாம் அவன் செயல் ஒருபொல்லாப்பும் இல்லை என செல்லப்பா சுவாமிகளின் கருத்துகளையும் தனது நன்றியுரையுடன் பகிர்ந்து கொண்டார். அதனை தொடர்ந்து அனைவருக்கும்  மதியபோசனம் வழங்கபட்டது .

இன்றைய சிவன் முதியோர் இல்ல புதிய கட்டிட திறப்பு விழாவில்  மாகாண சபை  மற்றும் நகர சபை சுகாதார சேவை கிராம சேவை  உத்தியோகத்தர்கள் சமூக சேவை அமைப்புக்களின் பிரதி நிதிகள் சிறுவர் முதியவர் மற்றும் பொதுமக்கள் சிவன்கோவில்  பக்த அடியார்கள்  தொண்டர்கள் வைத்தியசாலை ஊழியர்கள்  மற்றும் வவுனியா நகரை அண்டிய கோவிகளின் அந்தணர்பெருமக்கள்  அறங்காவலர்கள் தொண்டர்கள் அத்துடன்  வானொலி தொலைகாட்சி பத்திரிகை மற்றும் செய்தி இணையதளங்களை சேர்ந்த ஊடகவியலாளர் என பெருவளவானோர் கலந்து கொண்டனர் .

 வவுனியா நெற் செய்திகளுக்காக  கஜன் 


DSC_0037

DSC_0107 DSC_0098 DSC_0090 DSC_0084 DSC_0076

DSC_0069 DSC_0063 DSC_0061 DSC_0040 DSC_0037

DSC_0033

DSC_0114 DSC_0127 DSC_0129 DSC_0145

DSC_0180