ஜனா­தி­ப­தியின் தேவைக்­கேற்ப செயற்­ப­டு­வ­தா­கவும் தன்னை பத­வியில் வைக்­கு­மாறும் மொஹான் பீரிஸ் கோரினார் : ராஜித சேனாரட்ன!!

314

Rajitha

முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவை விலக்­கு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற தெரிவுக் குழு இறு­தியில் அவரை விலக்­கு­மாறு உரிய பரிந்­து­ரையை செய்­ய­வில்லை. எனவே அன்று இடம்­பெற்ற. தவறு கார­ண­மாக ஷிராணி பண்டா­ர­நா­யக்க கடந்த வியா­ழக்­கி­ழமை தனது கட­மை­களை மீண்டும் பொறுப்­பேற்றார் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

இந்­நி­லையில் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவும் பதவி வில­கி­விட்டார். தற்­போது அடுத்த சிரேஷ்ட தரத்தில் இருக்கும் நீதி­ய­ரசர் ஸ்ரீபவன் பிர­தம நீதி­ய­ர­ச­ராக நிய­மிக்­கப்­ப­டுவார் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவை விலக்­கு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற தெரிவுக் குழு இறு­தியில் அவரை விலக்­கு­மாறு உரிய பரிந்­து­ரையை செய்­ய­வில்லை. மீண்டும் ஒரு குழுவை நிய­மிக்­கு­மாறே பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது.

எனவே அன்று இடம்­பெற்ற தவறு கார­ண­மாக ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவை பதவி விலக்­கி­யமை சட்­ட­பூர்­வமாக கரு­தப்­பட முடி­யாது. என­வேதான் அவர் கடந்த வியா­ழக்­கி­ழமை தனது கட­மை­களை மீண்டும் பொறுப்­பேற்றார். எனவே அவரை பதவி விலக்­கி­யமை சட்­ட­பூர்­வ­மா­னது அல்ல என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே 2013 ஆம் ஆண்டு செய்­யப்­பட்ட புதிய பிர­தம நீதி­ய­ரசர் நிய­ம­னமும் சட்­ட­பூர்­வ­மா­ன­தல்ல.

எவ்­வா­றெ­னினும் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவும் பதவி வில­கி­விட்டார். தற்­போது அடுத்த சிரேஷ்ட தரத்தில் இருக்கும் நீதி­ய­ரசர் ஸ்ரீபவன் பிர­தம நீதி­ய­ர­ச­ராக நிய­மிக்­கப்­ப­டுவார். அன்று முன்னாள் ஜனா­தி­ப­தி­யிடம் மொஹான் பீரிஸை பிர­தம நீதி­ய­ர­ச­ராக நிய­மிக்­க­வேண்டாம் என்று நான் கூறினேன். ஆனால் அதனை கேட்­காமல் அந்த நிய­மனம் செய்­யப்­பட்­டது.

இதே­வேளை, மொ ஹான் பீரிஸ் ஜனாதிபதி மைத்திரிபாலவை தொடர்பு கொண்டு தான் புதிய நிலைக்கு ஏற்ப செயற்படுவதாகவும் தன்னை பதவி விலக்
கவேண்டாம் என்றும் கேட்டுள்ளார்.

அதனை கேட்ட ஜனாதிபதியும் பிரதமரும் சிரித்துள்ளனர். இதுதான் உண்மை நிலை மையாகும் என்றார்.