வவுனியா விபுலானந்தா கல்லூரியில் பிரம்மாண்டமான முறையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டி!!(படங்கள், காணொளி)

1036

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியின்  வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று (20.02.2015வெள்ளிக்கிழமை)  பிற்பகல் 2.00மணியளவில் உக்கிளாங்குளத்தில் அமைந்துள்ள சீர்திருத்த மைதானத்தில் கல்லூரியின் அதிபர் கே .தனபாலசிங்கத்தின் தலைமையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ பிரதி மகளீர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும்சிறப்பு அதிதியாக  வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ தியாகராஜா மற்றும் நகரசபை செயலாளர் சத்தியசீலன் மற்றும் வவுனியா தெற்கு கல்விவலயத்தின்  பொறியியலாளர் சிவகுமாரன்  வவுனியா பிரதேசசபையின் செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் அத்துடன் கல்லூரியின் பழைய மாணவரும் முன்னாள் விபுலானந்தா கல்லூரியின் சிரேஸ்ட மாணவ முதல்வனும் சக்தி வானொலியின் நிலாச்சோறு புகழ் வளர்ந்து வரும் இலங்கையின் புகழ் பூத்த முன்னணி அறிவிப்பாளரும் சக்தியின் நிகழ்ச்சி தயாரிப்பாளரும் சிரேஸ்டஅறிவிப்பாளருமான  தேவசகாயம் ஷெல்டன் அன்டனி மற்றும் கல்லூரியின் பழைய மாணவியும் வவுனியாவில் வளர்ந்து வரும் சட்டதரணியுமாகிய செல்வி நிரோசிகா அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .

அத்துடன்  பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் மகேந்திரராஜா , சிவகுமார்  மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் சிவதர்சன்  சீர்திருத்த விளையாடுகழக தலைவர் தேவபெனடிக் பண்டாரிகுள பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஜெயதிலக ஆகியோரும் பாடசாலையின் பழைய மாணவர்கள் முன்னாள் ஆசிரியர்கள் பெற்றோர் ஊடகவியலளர்கள் என பலவேறு பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட  பிரதி மகளீர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விபுலானந்த பாடசாலையின் மாணவர்களின் வகுப்பறை இட நெருக்கடி  தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்  பொருட்டு மூன்று மாடி கட்டிட தொகுதி ஒன்றை அமைப்பதர்ற்கும் கல்லூரிக்கு நிரந்தர விளையாட்டு மைதானம் ஒன்றை பெற்று கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார் .

மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட மாகாண சபை உறுப்பினர் தியாகராஜாவும் தன்னுடைய பன்முகபடுத்தபட்ட நிதியில் ஒருலட்சம் ரூபாவை விளையாட்டு மைதான புனரமைப்புக்கு வழங்குவதாகவும் சக்தி எப் எம்  நிகழ்ச்சி தயாரிப்பாளரும்  சிரேஸ்ட அறிவிப்பாளரும்  பாடசாலையின் பழைய மாணவருமாகிய  செல்டன் அன்டனி சக்தியின் வானொலியின் அனுசரணையில் மிகவும் கஷ்டத்தில் வாழ்கின்ற மாணவர்களை கருத்தில்கொண்டு கொண்டு ஒருதொகுதி கற்றல் உபகரணங்களை கல்லூரி அதிபர் தனபாலசிங்கதிடம் கையளித்ததோடு  மைதான கொள்வனவில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார் .

இறுதியில் விளையாட்டு குழு செயலாளர் நன்றிபகர வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கேடயங்கள் மற்றும் சான்றிதல்கள் வழங்கும் வைபவத்துடன் விளையாட்டு போட்டி நிறைவுற்றது .

வவுனியா நெற் செய்திகளுக்காக கஜன்.

DSC_0359 DSC_0372 DSC_0378 DSC_0392 DSC_0401 DSC_0411 DSC_0457 DSC_0463 DSC_0464 DSC_0466 DSC_0470 DSC_0479 DSC_0485 DSC_0499 DSC_0507 DSC_0509