வவுனியா ஊடாக வடக்கு நோக்கிபல வருடங்களுக்குப்பின் பயணித்த இலங்கையின் புராதன நீராவி புகையிரதம் !!(படங்கள், வீடியோ)

486

இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்குப் பின்னர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரை இன்று(24.02.2015)  பயணத்தை ஆரம்பித்துள்ளது. மேற்படி புகையிரதம் வவுனியா புகையிரத நிலையத்தில் சிறிது நேரம் தரித்து நின்றபோது ஏராளமான பொதுமக்கள் குழுமி பார்வையிட்டனர் .

என்னதான் புதியவை அறிமுகமானாலும்  பழையவைக்குஎப்போதும் மவுசு குறைவதும் இல்லை . புகையிரதம் அறிமுகமாகி தற்போது 200ற்கும் மேற்பட்ட வருடங்களாகிறது. புகையிரதம் ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் நீராவி புகையிரதமாக இயங்கியது.இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்கு பிறகு கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி யாழ்ப்பாணம்  புகையிரத நிலையம் வரை இன்று பயணத்தை ஆரம்பித்துள்ளது.

கைத்தொழில் புரட்சியின் பின் கண்டுபிடிக்கபட்ட இயந்திரங்களில் மிக முக்கியமானவை இந்த நீராவி இயந்திரங்களாகும் .

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த புகையிரதத்தில் செல்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவது சுட்டிக்காட்டதக்கதாகும்.தற்போதைய காலகட்டத்தில் இயங்கும் புகையிரத்தில் சாரதிகளுக்கு பல வசதிகள் இருந்தாலும் அக்காலத்தில் இயங்கிய நீராவி புகையிரதத்தில் சாரதிகளுக்கு எந்தவிதமான வசதிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பயணித்த இந்த புகையிரதம் வவுனியா  புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அதிகளவான மக்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

படங்கள்: மூர்த்தி 

1613907_10153214617267384_4899594847486726661_n 1907566_10153214617097384_3802546441848667709_n 1958300_10153214616522384_1859760555488180075_n 10150565_10153214616902384_3354774446833783174_n 10307224_10153214617147384_4486958622998335292_n 10988504_10153214617207384_3483358305145113658_n 10999009_10153214616807384_6635365652063834716_n 11006368_10153214616722384_8013513446391742712_n