வவுனியாவில் யாழ்.தர்மினி பத்மநாதனின் “விபச்சாரி 80 ரூபா” நூல் வெளியீட்டு நிகழ்வு!!

404

pic

யாழ்.தர்மினி பத்மநாதனின் “விபச்சாரி 80 ரூபா” சிறுகதைத்தொகுதி வரும் 28.02.2015 சனிகிழமை காலை 10.00 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெறவுள்ள இன் நிகழ்வில் தமிழ்மொழி வாழ்த்து மற்றும் வரவேற்புரையை ஆசிரியை கஜறதி பாண்டித்துரையும், வாழ்த்துரையை மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராசா (தலைவர்- வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்) அவர்களும் இ.நித்தியானந்தன் (மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்-வவுனியா) அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.

ஆசியுரையை திருமதி லில்லிபுளோரா நடேசமூர்த்தி (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களும், வெளியீட்டுரையை இலக்கியச் சுடர் .கதிர்காமாசேகரன் அவர்களும், திறனாய்வை வித்தியாரத்னா ந,பார்த்திபன் அவர்களும் நிகழ்த்த, நூல் வெளியீட்டினை இலக்கியக் காவலன் உடுவை சி.தில்லை நடராஜா (பொதுச் சேவை ஆணைக்குழு) அவர்கள் வெளியிட சிவநெறிப் புரவலர் சி.ஏ இராமஸ்சுவாமி அவர்கள் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

நாட்டாரிசையினை இசை ஆசிரியர் பிரபு குழுவினர் நிகழ்த்த, பூவரசி இதழ் அறிமுகத்தை கவிஞர் த.ஐங்கரன் நிகழ்த்த, திருமதி லில்லிபுளோரா நடேசமூர்த்தி (ஓய்வு பெற்ற அதிபர்) வெளியிட கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்கள் பெற்றுக்கொள்ளவுள்ளார்

கதையூடு கவிப்பாடலை கவிஞர் த .பிரதாபன் நிகழ்த்தவுள்ளார். கதையூடு அரங்காடல் நிகழ்வை ஆசிரியை கஜறதி பாண்டித்துரை நெறியாள்கை செய்ய நன்றியுரையினை கவிஞர் நந்தீஸ்வரி துரைராசா நிகழ்த்த, ஏற்புரையினை யாழ்.தர்மினி பத்மநாதன் (M.A , M.Phil) அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.

இன் நிகழ்வில் இலக்கிய மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நூல் ஆசிரியர் வேண்டுகோள் விடுக்கின்றார்.