மீண்டும் நிர்வாணப் போஸ் கொடுக்கப்போவதாக பரபரப்பை ஏற்படுத்திய பூனம் பாண்டே..

532


Poonam

இந்திய அணி உலகக்கிண்ணம் வென்றால் மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்கப் போவதாக மறைமுகமாக அறிவித்துள்ளார் பூனம் பாண்டே.



இவர் கடந்த உலகக் கிண்ண போட்டிகளின்போது, இந்தியா கிண்ணம் வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுக்கப் போகிறேன் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு பெரும் பரபரப்பைக் கிளப்பினார்.

இந்தியா உலகக்கிண்ணம் வென்ற போது வாயடைத்துப் போன பூனம் பாண்டே, முக்கால் நிர்வாணத்தில் சில புகைப்படங்களை எடுத்து டிவிட்டரில் தட்டிவிட்டார். அதன் பிறகு சில சினிமா வாய்ப்புகளும் வந்தன.



இந்நிலையில் இந்த முறையும் இந்தியா கிண்ணம் வென்றால் நிர்வாணமாகப் போஸ் கொடுக்கப் போவதாக அவர் மறைமுகமாக அறிவித்துள்ளார்.



இது குறித்து அவர் கூறுகையில், இந்த முறை இந்தியா உலகக்கிண்ணம் வென்றால், அவர்களுக்கு இனிய அதிர்ச்சி தரும் வகையில் தான் ஒரு விடயத்தைச் செய்யப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார். அப்படி என்ன அதிர்ச்சி என்று கேட்ட போது, காத்திருங்கள்.. என்று மட்டும் கூறியுள்ளார்.