வடமாகாண வருடாந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவர்கள்!!(படங்கள்)

804

வடமாகாண விளையாட்டு திணைக்கழகத்தால் நாடாத்தப்படும் வருடாந்த தேசிய விளையாட்டுப் போட்டி நேற்று (01.03) ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை வேலாயுதம் மா.வித்தியாலையத்துக்கு முன்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப் போட்டியின் முதலாவது விளையாட்டு போட்டியாக வேகநடை போட்டியை யாழ்பாண விளையாட்டுத்துறை மருத்துவ அதிகாரி வைத்தியர் எஸ்.அருள்செல்வன் மற்றும் பருத்தித்துறை நகரசபை தலைவர் சபா ரவீந்திரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

இதில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் பெண் போட்டியாளர்கள் வயது வேறுபாடின்றி கலந்து கொண்டனர். போட்டியின் இறுதியில் வெற்றியீட்டியவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டது.

இதில் வெற்றியீட்டிய ஆண் போட்டியாளர்கள்..

1ம் இடம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே.சந்திரவேந்தன்
2ம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே.றசிகரன்
3ம் இடம் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ரங்கன்

பெண்கள் பிரிவில்..

1ம் இடம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே.கனகேஸ்வரி
2ம் இடம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.சுதர்சினி
3ம் இடம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே.கோகுலவதனி

இதில் கே.கனகேஸ்வரி பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

2010ம் ஆண்டு கே.கோகுலவதனி 20 கிலோ மீற்றரை 2மணித்தியாலம் 10 நிமிடம் 57 செக்கன்களில் கடந்து சாதனை படைத்தார்.

இதனை நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வேகநடைப் போட்டியில் கே.கனகேஸ்வரி 2மணித்தியாலம் 10 நிமிடம் 37 செக்கன்களில் கடந்து புதிய சாதனை படைத்தார்.

இதில் மாவட்ட ரீதியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி மாவட்டம் 1ம் இடத்தையும் பெண்களில் வவுனியா மாவட்டம் 1ம் இடத்தையும் 2ம் இடத்தை மன்னார் மாவட்டம் பெற்றுக் கொண்டன.

1 4 5 6 7 8 9 10 11 12 13 14 01