அரைகுறை ஆடையுடன் ஆண்களைத் தூண்டி விடுவதே பெண்கள் தான் : டெல்லி குற்றவாளி பரபரப்புப் பேட்டி!!

398

Mukesh Singh

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்த கும்பலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முகேஷ் சிங் என்பவர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

பலாத்காரம் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் முகேஷ் சிங் பிபிசிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், இரவில் வெளியில் செல்லும் பெண்கள் தான் ஆண்களின் கவனத்தை ஈர்ப்பதாகவும், பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு தூண்டும் காரணமாக உள்ளதாகவும் எனவே இவ்விடயத்தில் பெண்களே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

பலாத்கார சம்பவத்திற்கு ஒரு ஆணை விட பெண் தான் முக்கிய பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று அந்த பெண் தனது ஆண் நண்பருடன் நள்ளிரவு சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது ஒரு சிற்றூந்தில் பயணம் செய்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்கள் இருவருக்கு லிஃப்ட் வழங்குவதாக கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பேருந்தினுள் அந்த பெண்ணின் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற போது இரும்பு தடியை கொண்டு அந்த பெண்ணை பலமாக தாக்கினர்.

இதனால் படுகாயமடைந்த அந்த பெண், இரண்டு வார போராட்டத்திற்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை எழுப்பிய இந்த சம்பவ‌த்தை பற்றி முகேஷ் கூறுகையில், அந்த பெண் அன்று இரவு நாங்கள் பலாத்காரம் செய்ய முயன்றபோது சண்டை போடாமல் இருந்திருந்தால் நாங்கள் அவ்வாறு கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தாங்கள் அந்த பெண்ணை கொன்றது விபத்து என்று குறிப்பிட்ட மகேஷ், பலாத்காரம் செய்யும் போது அந்த பெண் எதிர்த்து போராடியிருக்க கூடாது, என்றும் அமைதியாக பலாத்காரத்தை அனுமதித்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அமைதியாக அனுமதித்திருந்தால் அந்த பெண்ணை தாக்கியிருக்க மாட்டோம், அவரது ஆண் நண்பனை மட்டுமே தாக்கியிருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு கௌரவமான பெண் இரவு 9 மணிக்கு மேல் சாலையில் சுற்றி திரியமாட்டார் என்றும் ஆணும் பெண்ணும் சமம் இல்லை. பெண் என்பவள் வீட்டை பராமரிப்பவளே அன்றி தவறான ஆடைகளை அணிந்து கொண்டு நள்ளிரவில் டிஸ்கோ பார் என்று அலைபவள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

தற்போது மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ், இந்த விடயத்தில் மரண தண்டனை வழங்குவது பெண்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

அதாவது முன்னெல்லாம் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தால், அவள் யாரிடமும் நடந்ததை கூறமாட்டாள் என்று உயிரோடு விட்டுவிடுவார்கள்.

ஆனால் மரண தண்டனை அறிவித்தால் பெண்களை கற்பழிக்கும் குற்றவாளிகள் அவர்களை கொன்று விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மகேஷ் தான் அந்நேரத்தில் வாகனம் ஓட்டியதாகவும், பலாத்காரத்தில் ஈடுபடவில்லை என்று வாதிட்டதை ஏற்காத நீதிபதி, டி.என்.ஏ சாட்சிகள் அவருக்கு எதிராக உள்ளதாக தெரிவித்ததோடு இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தாததும் தவறு என்று கூறியது குறிப்பிடத்தக்கது.