வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் சப்பர திருவிழா (படங்கள் வீடியோ)!!

544


இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் ஏழாவது மகோற்சவ பெருவிழாவில் இன்றைய தினம்(02.03.2015) சிறப்பாக சப்பர  திருவிழா இடம்பெற்றது .

இன்றுமாலை ஆறுமணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று  எழுமணிளவில் உள்வீதி வலம்வந்து  பின்னர் எட்டுமணியளவில்  கருமாரி நாகபூசணி அம்பாள் அழகிய சப்பரத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்புரிந்த வண்ணம் மீண்டும் ஒன்பது மணியளவில் ஆலயத்தை வந்தடைந்தாள் .



படங்கள் :கஜன்

 



16190_970454779641142_613384579437568923_n 988944_970455659641054_4176158674227482002_n 10170722_970455469641073_2477842969325849143_n 10461934_970455252974428_4314093328004078670_n 10985169_970455099641110_2118939078562806671_n 11015106_970455682974385_5118689483420414135_n 11034229_970455399641080_2887251589322326656_n 11034911_970455606307726_6968704336111026144_n 11037776_970455176307769_865679008453026268_n 11041807_970455576307729_3222163638995243630_n 11046741_970455046307782_281602246348152265_n