உக்ரேனில் மோதல்களில் 6,000 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!!

260

Ukrine

உக்­ரேனில் இடம்­பெற்­று­வரும் மோதல்­களில் பலி­யா­ன­வர்கள் தொகை 6,000 ஐயும் தாண்­டி­யுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் தலை­வர்கள் திங்­கட்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர்.

மேற்­படி மோதல்­களால் உக்­ரே­னி­லுள்ள பொது­மக்­க­ளது உயி­ருக்கும் உட்­கட்­ட­மைப்­புக்கும் பாரிய அழிவு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இதனை மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ரான ஒரு குற்­ற­மாக கருத முடியும் எனவும் மேற்­படி தலை­வர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.

கிழக்கு உக்­ரேனில் ஒரு வரு­டத்­திலும் குறைந்த காலப் பகு­தியில் இடம்­பெற்ற மோதல்­க­ளி­லேயே மேற்­படி மர­ணங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் ஸெய்த் அல் ஹுஸைன் தெரி­வித்தார்.

கடந்த பெப்­ர­வரி மாதம் 15 ஆம் திகதி செய்­து­கொள்­ளப்­பட்­டுள்ள யுத்த நிறுத்த உடன்­ப­டிக்­கைக்கு அனைத்துத் தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.