வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் ஆறாம் நாள் உற்சவம் (படங்கள் வீடியோ)!

653


வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஆறாம்   நாளான நேற்று முன்தினம்  25-03 -2015புதன்கிழமையன்று காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நடராஜ ராஜாராம் குருக்கள் தலைமையில் நடராஜ பெருமானுக்கு விசேட யாகம் மற்றும் அபிசேகங்கள் முதலியன  இடம்பெற்று 10.30 மணியளவில்  வசந்தமண்டப பூஜை இடம் பெற்று விநாயகர்  வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும்  தனி தனி வாகனங்களிலும்  நடராஜரும் பார்வதியும்  அசைந்து ஆடி  ஆடி  வீதி வலம் வந்தமை இன்றைய தினம் விசேட அம்சமாகும்.

ஈற்றில்  நடராஜ பெருமானுக்குரிய யாகம் கலைக்கப்பட்டு  வழமையான  மதிய பூஜையுடன்  பகல் திருவிழா நிறைவு பெற மாலை மமீண்டும் வழமை போல நான்கரை மணிக்கு  மகா யாகம் தொடங்கப்பட்டது . அதன் பின் தம்ப பூஜை வசந்த மண்டப பூஜையுடன் விநாயகர்  வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும்  மூசிகம் மற்றும் மயில்  வாகனங்களிலும்  அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  சர்ப்ப வாகனத்திலும் திருவீதி உலா வந்து மாலை திருவிழா இரவு ஒன்பது மணியளவில் நிறைவு  பெற்றது .



21984_519114894895749_6810039816488463239_n 10300432_519114484895790_7651147454052018802_n 10438469_519114728229099_2170673087050900399_n 11024721_519114988229073_621997253781866043_n 11039285_519114761562429_6344045109913316950_n 11049527_519115741562331_1310729408862732067_n 11082596_519122314895007_4503032957208577583_n 11084239_519114514895787_4373165054197306681_n