வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் எட்டாம் நாள் உற்சவம் (படங்கள் வீடியோ)!!

398


வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் எட்டாம்  நாளான நேற்று  27-03 -2015 வெள்ளிக் கிழமை காலை முதல்மகோற்சவ   குரு சிவஸ்ரீ நடராஜ ராஜாராம்  குருக்கள் தலைமையில்  காலையில் சங்காபிசேகம் நடைபெற்று  பின்னர் தைலாப்பிய உற்சவத்துக்குரிய அபிசேகங்கள் நடை பெற்று மதியம் நேற்று பொழிந்த கடும் மழை காரணமாக உற்சவ மூர்த்திகளை அகிலாண்டேஸ்வர பெருமானின் பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்து உள்வீதி மற்றும் வெளிவீதி உலா வந்தனர் ..

மீண்டும்  மாலை உற்சவத்துகுரிய  அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு  ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  இடபவாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும்  திருவீதி உலா வந்த நிகழ்வு  இடம்பெற்று இன்றைய திருவிழா இனிதே நிறைவு பெற்றது.



மேலும் அகிலாண்டேஸ்வரத்தில் உற்சவகாலங்களில் மகேஸ்வர பூஜை என்று சொல்லபடுகின்ற  அன்ன தான நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெறுவதுண்டு. அகிலாண்டேஸ்வரதுக்கு வருகின்ற பக்தர்கள் மனநிறைவோடு இறைவனை வழிபட்டு பின்னர் அவர்கள் வயிறார உண்பதற்கு  அன்னதானமும் வழங்கப்படுவது சிறப்பாகும்.



20150327_110912 20150327_111228 20150327_125410 20150327_125254 20150327_123838 20150327_112131 20150327_111312



20150327_203125 20150327_201818 20150327_201516 20150327_195413 20150327_195406 20150327_192455 20150327_191808 20150327_191605 20150327_131859 20150327_131717