வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் ஒன்பதாம் நாள் பிச்சாடன உற்சவம்!! (படங்கள் வீடியோ)

401

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்ஒன்பதாம் நாளான நேற்று  28-03 -2015 சனிக்கிழமை பிச்சாடன  உற்சவம் இடம்பெற்றது.

பிச்சாடன உற்சவம் என்பது  அன்பின் வடிவினனான சிவனை ரிக் வேதம் அழகின் ரூபியாக சித்தரிக்கிறது.இவர் தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அடக்க வந்த சிவனின் கோர ரூபம்.தாருகாவனத்து முனிவர்கள் தம் தவ வலிமையினால் மமதை கொண்டு தாமே கடவுள் என்ற இறுமாப்புடன் வாழ்ந்து வந்தனர்.அவர்களின் ஆணவத்தை அடக்க உடலில் ஆடையில்லா கோலத்துடன் பிச்சை பாத்திரம் ஏந்தி நாயுடன் தாருகாவனம் சென்றார்.

இவரின் கோலத்தைக் கண்டு இச்சித்த முனிவர்களின் மனைவிகளின் கற்புத்திறன் அழிந்தது.இதனால் முனிவர்களின் மமதையும் நீங்கியது.இக் கதையை சித்தரிக்கும் முகமாக மேற்படி திருவிழா கொண்டாடபடுகிறது சிவன் கோவில்களில்  தொடர்ந்து  வசந்த மண்டப பூஜையின் பின் சிவபெருமான் பிச்சண்டியாகவும்  விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருக பெருமானும் சண்டேஸ்வர பெருமானும்  உள்ளவீதி வெளி வீதி  வந்தனர்.

மீண்டும் மாலையில்ஆறுமணிக்கு வசந்த மண்டபபூஜையை  தொடர்ந்து அழகிய  மலர் தண்டிகையில் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரரும் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் மயிலிலும்  விநாயகர்  மூசிக வாகனத்திலும் பவனி வந்தனர்.

20150328_111659 20150328_111732 20150328_112051 20150328_113956 20150328_114052 20150328_115030 20150328_115207 20150328_120609 20150328_120726 20150328_185207 20150328_190707 20150328_191251 20150328_192129 20150328_193907 20150328_194158 20150328_194309 20150328_194317 20150328_194648 20150328_195856 20150328_200909 20150328_201513 20150328_201913